உள்ளாட்சி தேர்தல் எப்போது?.. அரசியல்கட்சி கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு.

by Editor / 06-09-2021 06:41:52pm
உள்ளாட்சி தேர்தல் எப்போது?.. அரசியல்கட்சி கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு.

சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில், இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த கூட்டத்தின் முடிவில் கருத்துக்களை தெரிவித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர், " உச்சநீதிமன்ற உத்தரவின்படி விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தேர்தலுக்கான நடவடிக்கைகள் அனைத்தும் தொடங்கப்படும்.ஆலோசனையில் கலந்துகொண்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் பரிசீலனை செய்யப்படும். உகந்தவை ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படும். அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை நடத்தவும், அதற்கான பணிகளுக்கும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் " என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via
Logo