நாடாளுமன்ற தேர்தலுக்காக மூடப்பட்ட மூதறிஞா் ராஜாஜி சிலை திறக்கமறந்த அதிகாரிகள்.

by Editor / 23-08-2024 11:57:59pm
நாடாளுமன்ற தேர்தலுக்காக மூடப்பட்ட மூதறிஞா் ராஜாஜி சிலை திறக்கமறந்த அதிகாரிகள்.

கோவில்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எதிரே  மூதறிஞா் ராஜாஜி மார்பளவு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு  கடந்த 1974 ஆம் ஆண்டு தமிழக முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் செல்ல பாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய தமிழக ஆளுநர் கே‌.கே.ஷா திறந்து வைத்தார்.  நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கட்டுப்பாடு, நன்னடத்தை விதிகள்  காரணமாக மூதறிஞா் ராஜாஜி‌ மார்பளவு சிலையை மறைக்கும் வகையில் வருவாய்த் துறையினர் துணியை  வைத்து சுற்றி வைத்தனர். ஆனால் தேர்தல் முடிவடைந்து 2  மாதங்களாகியும் மூதறிஞா் ராஜாஜி மார்பளவு திருவுருவச் சிலையை மூடப்பட்ட துணி அகற்றப்படாமல் அப்படியே வைத்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக மூதறிஞா் ராஜாஜி‌ திருவுருவச் சிலை மூடப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : நாடாளுமன்ற தேர்தலுக்காக மூடப்பட்ட மூதறிஞா் ராஜாஜி சிலை திறக்கமறந்த அதிகாரிகள்.அதிகாரிகள்.

Share via