முதலமைச்சர் தலைமையில்  மூன்று நாள் மாநாடு

by Admin / 06-03-2022 08:49:20am
முதலமைச்சர் தலைமையில்  மூன்று நாள் மாநாடு

 


தமிழக முதலமைச்சர் தலைமையில்,சென்னையில் மூன்று நாள் மாநாடு நடக்கயிருக்கிறது.இம்மாநாட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,காவல்துறையினர்,வனத்துறையினர் பங்கேற்க உள்ளனர்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 10.3.2022  முதல் 12.3.2022 வரை உள்ளநாட்களில் சென்னையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,காவல் துறை,வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது.அரசு பத்து மாதங்களில் மாநிலத்தை வளர்ச்சிப பாதையில் கொண்டு செல்லும் விதமாக பல்வேறு புதிய அறிவிப்புகளையும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.இந்த வகையில் ஆளுநர் உரை,முதலமைச்சர் அவர்களின் செய்தி வெளியீடு மற்றும்
சட்டமன்ற பேரவை விதி எண்110 ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கை,வேளாண்மை நிதி நிலைஅறிக்கை அமைச்சர் பெருமக்களால் மானில கோரிக்கைகளின் போது வெளியிடப்பட்டு அதில் 80 சதவிகிததிற்கும் மேலான அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு,செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் செயல்பாட்டைஆட்சித்தலைவர்களின் மூலமாக அறிந்து கொள்வதற்காகவும்,அவற்றை மேலும் சிறப்பாகவும் விரைவாகவும்செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து உரிய அறிவுரைகளை வழங்குவதற்கும்  இந்த மாநாடு நடைபெறுகிறது. இதுவரை வனதுறை அலுவலர்கள் முதலமைச்சரின் ஆய்விலோ மாநாட்டிலோ கலந்து கொண்டதில்லை.

முதல்முறையாக வனத்துறை அலுவலர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வனத்துறை தொடர்பான திட்டங்களை முதலமைச்சர் ஆய்வுசெய்ய இருக்கிறார் இந்த மூன்று நாட்கள்
மாநாட்டில் மாவட்ட நிர்வாகம்,சட்டம் ஒழுங்கு மாவட்ட வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விரிவான ஆய்வினை முதலமைச்சர் மேற்கொள்வார்கள்.மேலும் வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வாயிலாக அறிந்து அதன் அடிப்படையில் சிறப்பான திட்டங்களைக்கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படஉள்ளது.என்று அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories