மின்சாரம் பாய்ந்து யானை பலி - கொடூர வீடியோ

by Staff / 18-03-2023 04:11:26pm
மின்சாரம் பாய்ந்து யானை பலி - கொடூர வீடியோ

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே கெலஹல்லி ஏரிக்கரை ஒன்றின் மீது யானை ஏறிக்கொண்டிருந்தது. அப்போது தாழ்வாக சென்ற மின் கம்பியில் யானை எதிர்பாரத விதமாக உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் அந்த ஆண் யானை பரிதாபமாக உரியிழந்தது. யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆண் யானை உயரிழிந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மொரப்பூர் வனசாகர் ஆனந்த் குமார், காரிமங்கலம் வட்டாட்சியர் சுகுமார், கம்பைநல்லூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், வருவாய் அலுவலர் சுரேஷ், கம்பைநல்லூர் கால்நடை உதவி மருத்துவர் கனகசபை ஆகியோர் முன்னிலையில் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட உள்ளது.

 

Tags :

Share via

More stories