சென்னை - நெல்லை, திருச்செந்தூர் - தாம்பரம் இடையே கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நெல்லைக்கும்,திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படஉள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
1. வண்டி எண் 06001 சென்னை எழும்பூர் - நெல்லை சிறப்பு ரயில் எழும்பூரில் 17.11.23 நாளை வெள்ளிக்கிழமை இரவு 11.55 க்கு புறப்பட்டு சனிக்கிழமை மதியம் 12.45 க்கு நெல்லையை சென்றடையும்.
2. வண்டி எண் 06002 திருச்செந்தூர் - தாம்பரம் சிறப்பு ரயில் திருச்செந்தூரில் 18.11.23 சனிக்கிழமை இரவு 10.10 க்கு புறப்பட்டு நெல்லைக்கு 11.45 க்கு வந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.45 க்கு தாம்பரத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி நிலையங்களில் நின்று செல்லும். திருச்செந்தூர் - தாம்பரம் சிறப்பு ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயிலில் ஒரு இரண்டடுக்கு குளிர்சாதனப்பெட்டி, ஒரு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 6 முன்பதிவு இல்லாத பெட்டிகள், 2 கார்டு பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
Tags : சென்னை - நெல்லை, திருச்செந்தூர் - தாம்பரம் இடையே கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்