மெக்சிகோ இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளது.

by Admin / 12-12-2025 02:14:28am
மெக்சிகோ இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளது.

மெக்சிகோ, இந்தியா , சீனா ,தென்கொரியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து 1,400 க்கு மேற்பட்ட பொருள்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பானது தங்களிடம் வர்த்தக ஒப்பந்தம் செய்யாத ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தும்.   புதிய வரி விதிப்பானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று மேக்சிகோ அறிவித்துள்ளது. வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, பிளாஸ்டிக், எக்கு, மின்னணுவியல் ,வீட்டு உபகரணங்கள் ,காலணிகள் மற்றும் தோல் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் இந்த புதிய வரி விதிப்பில் அடங்கும். மெக்சிகோவின் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாத்தல், இறக்குமதி சார்பு நிலையை குறைத்தல், மற்றும் உள்ளூர் வேலை வாய்ப்பை ஊக்குவித்தல் ஆகியவை இந்த வரி விதிப்பிற்கான முக்கிய காரணங்களாக மெக்ஸிகோ அரசு தெரிவித்துள்ளது  இந்த நடவடிக்கையானது, சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய ஏற்றுமதியை ஆபத்தில் ஆழ்த்தும். குறிப்பாக, ஆட்டோமொபைல் துறையை கடுமையாக இது பாதிக்கும் என்று சொல்லப்படுகிறது. மெக்ஸிகோ, இந்திய கார்களுக்கான மூன்றாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகும். .இந்திய ஏற்றுமதியாளர்கள், இந்த வரி விதிப்பின் தாக்கத்தை குறைப்பதற்காக மெக்சிகோவுடன் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபடுமாறு இந்திய வர்த்தக அமைச்சகத்திடம் வலியுறுத்தி உள்ளனர்.

 

Tags :

Share via