விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை இன்று விநாயக சதுர்த்தி..

by Admin / 31-08-2022 04:57:24am
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை இன்று விநாயக சதுர்த்தி..

ஸ்ரீ விநாயகர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
    வக்ரதுண்டாய தீ மஹி
தந்தோ தந்தி; ப்ரசோதயாத்

கணபதி த்யான  மந்திரம்

சுக்லாம் பர தரம் விஷ்ணும்
   சசிவர்ணம் சதுர் புஜம்
ப்ரசஸன்ன வதனம் த்யாயேத்
 ஸர்வ விக்னோப சாந்தஹே

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை

முதன் முதலில் விநாயகருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்தவர் வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி தான்.கொழுக்கட்டையின் மேல் பகுதியில் உள்ள வெள்ளைமாவு தூய்மையையும் உள்ளேயுள்ள இனிப்பு பூரணம் பரிபூரணவாழ்வையும் தரும் என்பது ஐதீகம்.விநாயகருக்கு உகந்தது மோதகம் தான்.21 கொழுக்கட்டை வைத்து வழிபடுவதுசிறப்பு.


விநாயக வழிபாட்டின் தத்துவம்

விநாயக சதுர்த்தியன்று களிமண்ணால் ஆன சிலை செய்து பூஜை செய்து அதன் பின் தண்ணீரில் கரைப்பது வழக்கம்அதீபதி கணபதி. அதனால்,மண்ணால் சிலை செய்து வழிபட்டு தண்ணீரில் கரைக்கப்படுகிறார்.இது பிறப்பின்தத்துவத்தையே விளக்குகிறது. பஞ்சபூத சேர்க்கையால் ஏற்படும் இந்த பிறப்பு முடிவில் பஞ்சபூததத்துக்குள்ளேயே அடங்குகிறது.என்பது தத்துவம்.

இன்று விநாயக சதுர்த்தி..இந்தியா முழுவதுமுள்ள இந்துக்கள்,சமணர்கள், பெளத்தர்கள் கொண்டாடும் கோலகலாமாககொண்டாடும் வ்ழா.இந்து மதத்தில் அனைத்து நல்ல செயல்களின் தொட்க்கமாக வழிபடப்படும்  தெய்வம் விநாயகர்.அவரின் பிறந்த  நாளை விநாயக சதுர்த்தியாக  களி மண்ணால் ஆகிய உருவத்தை வைத்து வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுவதால், ஆவணிமாதம்  சுக்லபட்ச சதுர்த்தி முதல் தொடர்ந்து  விரதத்தை  மேற்கொள்வது  நல்லது. அன்று  அதி காலையில் நீராடி , முழு நாளும்  விரதமிருந்து ,உணவு  உட் கொள்ளாமல்   பால்,பழம் மட்டும்அருந்துவது சிறப்பானது.ஆலயத்திற்குச்சென்று விநாயக பெருமானுக்கு நடைபெறும் அபிஷே ஆராதனைகளைக்கண்டுவழிபட வேண்டும்,அன்றைய தினம் ஆலயத்தைப்பதினோறு முறை வலம் வரும் பொழுது விநாயகர்  அகவலையோ, விநாயகர் கவசங்களையோ, கற்பக விநாயகர் காரிய  சித்தி  மாலையையோ,கணேசர்  காயத்ரி ஸ்லோகங்களையோ படித்து விரதத்தை முடித்துக் கொள்ள  வேண்டும் .விநாயகப்பெருமானுக்கு  அருகம் புல் மாலை ,வில்வ இலை மாலை ,எருக்கம்பூமாலை,மல்லிகைப்பூ மாலை,செம்பருத்தி மாலை இவற்றில் ஒன்றை அணிவித்து Cவது சிறப்பு , பார்வதி தேவி  இவ்விரதம்   கடைபிடித்து    சிவ பெருமானை அடைந்ததாகப்  புராணங்கள்  கூறுகின்றன.பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்ற பொழுது இவிவிரத்தை கடைபிடித்து  கெளரவர்களை  வென்றாகவும் இந்திரன்  இவ்விரத்தின் மூலமே வல்லமை பெற்றதாகச்சொல்லப்படுகிறது.

 

Tags :

Share via