பார்வதி தேவி தனது மகன் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கிய நாளே தைப்பூசம்.
தை மாதம் என்றாலே தமிழர்களின் சிறப்புக்குரிய மாதம். அறுவடை திருவிழாவை கொண்டாடுவது போன்று அந்த மாதத்திலே தமிழ் கடவுளாம் முருகப்பெருமானை கொண்டாடும் விதமாக நிகழ்த்தப் பெரும் திருவிழாவே தைப்பூசம். பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிவரும் நாளில் கொண்டாடப்படும் இந்து மத விழா இது.
அசுரன் சூரபத்மனை அழிப்பதற்காக பார்வதி தேவி தனது மகன் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கிய நாளே தைப்பூசம் என அழைக்கப்படுகின்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்த ஆண்டின் தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்து பால் காவடி பன்னீர் காவடி வேல் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து சென்று முருகனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவர் அழகு குத்துதல் போன்ற முறைகளும் இந்த தைப்பூசத்தில் இடம்பெறும். அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படுகின்ற பழனி திருச்செந்தூர் திருக்கோயில்களில் விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். இலங்கை மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இத்த தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இது ஒரு வெற்றிக்குரிய அடையாளமாக கொண்டாடப்படும் திருவிழா. தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டி வெற்றி கொண்டாட்டமாக தமிழர்கள் காலம் காலமாக இந்த தைப்பூசத்தை கொண்டாடி வருகிறார்கள். கடவுள் முருகப்பெருமாள் தங்களை காப்பதற்காக அசுரனை அழித்து தங்களுடைய வாழ்க்கை இயல்பாக நடந்தேறச் செய்த கடவுளுக்கு நன்றி சொல்லும் ஒரு நாளாகவும் இது பார்க்கப்படுகின்றது.
முருக வழிபாட்டில் முக்கியமான ஒரு திருவிழாவை தைப்பூசம். பக்தர்கள் 48 நாட்கள் அல்லது 21 நாட்கள் விரதம் இருந்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை முருகன் சன்னதியில் நிறைவேற்றுவர். இந்த நாளில் காலையும் மாலையும் நீராடி முழுமையாக உபவாசம் இருந்து... இல்லை பால் மற்றும் பழங்களை மட்டுமே தங்கள் உணவாக எடுத்துக்கொண்டு விரதத்தை நோற்பவர்களும் உண்டு. இந்த விரத நாட்களில் கந்தர் சஷ்டி கவசம் பாடுவதும் திருப்புகழை பாடுவதும் கந்தர் அனுபூதியை பாடுவதும் தங்களுடைய பிறவி கடமையாக நினைத்து பக்தர்கள் முருகன் மீது அளவற்ற அன்பும் தெய்வீக உணர்வும் கொண்டு தைப்பூசத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளுவர். காவடி எடுத்துச் செல்வதும் அ லகு குத்தி கொள்வதும் பால்குடம் ஏந்தி முருகனுக்கு அபிஷேகம் செய்வதற்கு ஊர்வலமாக எடுத்துச் 20 மாக தங்களுடைய நேர்த்திக் கடன்களை பக்தர்கள் மேற்கொள்ளுவர். முருகனுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செய்தால் தங்கள் குடும்பம் செழிக்கும் -ஒற்றுமை அதிகரிக்கும் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சி தங்கும் என்று இந்த தைப்பூச திருவிழாவை கொண்டாடி வழிபட்டு மகிழ்வர்.
Tags :


















