தமிழக அமைச்சரவை மாற்றமா.. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறாரா.?.

by Admin / 18-09-2024 01:13:32pm
தமிழக அமைச்சரவை மாற்றமா.. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிறாரா.?.

 

 நேற்று திமுகவின் முப்பெரும் விழா மிகப் பிரம்மாண்ட முறையில் ஒய். எம் .சி .ஏ மைதானத்தில் நடந்து முடிந்த நிலையில், இன்று தமிழக விளையாட்டு துறை அமைச்சர் தி.மு.க இளைஞரணி மாநில தலைவர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக ஆக்கப்படுவார் என்கிற செய்தி பலமாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றது. .இது குறித்து முடிவெடுப்பதற்காக தமிழக முதலமைச்சர், திமுக துணை பொது செயலாளர் ராசா, டி. ஆர். பாலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர் உடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்.. தமிழக முதலமைச்சர் அமெரிக்க பயணத்தை  மேற்கொண்டு 7000 கோடிக்கு மேலான அந்நிய முதலீட்டை ஈர்த்து வந்த கையோடு கட்சியினர் உதயநிதி ஸ்டாலினை துணை  முதல்வர் ஆக்க வேண்டும் என்கிற கருத்து வலுவந்த நிலையில்,  நேற்றைய மாநாட்டிற்கு பின்பு இந்த கருத்து அதிகரித்து இன்று முக்கிய செய்தியாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவாா். என்கிற அறிவிப்பு வரும் என்று கட்சியினர்அனைவரும்எதிர்பாா்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

Tags :

Share via

More stories