ஆம்ஸ்ட்ராங்கை கொன்ற கொலையாளிகளில் பாஜக நிர்வாகி

by Staff / 06-07-2024 05:03:25pm
ஆம்ஸ்ட்ராங்கை கொன்ற கொலையாளிகளில் பாஜக நிர்வாகி

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளிகளில் ஒருவர் குறித்து காவல்துறை விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கொலையாளிகளில் ஒருவரான செல்வராஜ் திருநின்றவூர் பாஜக எஸ்சி, எஸ்டி பிரிவு மண்டல தலைவர் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே, பழிக்கு பழி வாங்கும் சம்பவமாக இந்த கொலை வழக்கு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், பாஜக நிர்வாகி கொலையாளியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via
Logo