4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள வீட்டுவசதி வாரிய தலைமையகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தவர் நரேஷ் சாஹு. இவர், நேற்று (ஜூலை 5) அலுவலகத்தின் வெளியே உள்ள கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :