பிஎட் ஆசிரியர் படிப்புக்கு கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் பொன்முடி

by Editor / 26-07-2021 05:09:55pm
பிஎட் ஆசிரியர் படிப்புக்கு கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் பொன்முடி

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

துறை உயர்கல்வித் துறையில் இருக்கும் பிஎட் ஆசிரியர் படிப்புக்கான ஆண்டுக்கு 30 ஆயிரம் மேல் தனியார் கல்லூரிகள் வசூலிக்க கூடாது அப்படி வசூலித்தால் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் இந்தாண்டு கல்வி கட்டணம் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும்

ஜெயலலிதா  பெயரில் விழுப்புரத்தில்  பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டிருப்பது மாணவர் நலன் கருதி அல்ல, கடந்த ஆட்சியில் பெயர் வைக்க வேண்டும் என்ற அளவுக்கு துவங்கப்பட்டது. இதுவரை அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உட்பட 4 பேர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

கடந்த ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறையில் பல்வேறு பணி நியமன முறைகேடுகள் நடைபெற்றது. அதிமுக எம்எல்ஏவின் தங்கை திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முறைகேடாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் இது குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது

பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை அந்தந்த கல்லூரி உதவி மையங்கள் மூலமும் நேரடியாகவும் பெறலாம்  ஆன்லைன் மூலமும் பதிவு செய்யலாம் பள்ளிக்கல்வித்துறை போல் உயர் கல்வி பாடப் புத்தகத்திலும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று பாடப் புத்தகத்தில் இருக்கும் எனத் தெரிவித்தார்திறந்தவெளி பல்கலைக்கழக பாடபுத்தகங்களில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து இடம் பெற்றிருந்த தவறான  சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நீக்கப்பட்டன. அவை சரிசெய்யப்பட்டு புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன

கொரானோ பரவல் குறைந்த பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து கல்லூரிகளைத்  திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்

 

Tags :

Share via