செந்தில் பாலாஜிக்கு ஜன.4 வரை காவல் நீட்டிப்பு
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, உடல்நலக்குறைவு என பல காரணங்கள் கூறி ஜாமின் கோரிய மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு இன்று ஆஜரானார். அப்போது, அவரின் காவலை ஜனவரி 4 வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
Tags :