கண்திருஷ்டி.. -- சிவ:ஆதிஸ்வர்

by Admin / 18-08-2021 09:30:52pm
கண்திருஷ்டி.. -- சிவ:ஆதிஸ்வர்

 

 எவ்வளவு பெரிய நாகரீக காலம் ஆனாலும் ஒருவருடைய கண்பார்வைக்கு உண்டான சக்தியானது நிகரில்லா வலிமை பெற்றது.

 எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் எதிர்மறை ஆற்றல் அதிகம் உள்ள நபரின் பார்வையானது அவரின் மீது படும் பொழுது அவரிடம் உள்ள அந்த ஆற்றலானது தீயில் பட்ட பஞ்சுபோல் அழிந்துவிடும்.

 ஒவ்வொரு மனிதருக்குள்ளும் மிகப்பெரிய மின்காந்த ஆற்றல் ஒன்று உள்ளது.

 இந்த மின்காந்த ஆற்றலானது புவியின் ஆற்றளுடன் சேர்ந்து மிகப்பெரும் சக்தியாக மாறி கண்ணின் வழியாகவும், வாயிலிருந்து வரும் வார்த்தைகள் வழியாகவும், கைகளின் வழியாகவும், கால் வழியாகவும் மாபெரும் ஒரு தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

இரும்பை காந்தம் இழுப்பது போல மனித உடலில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருக்கக்கூடிய நபர் நேர்மறை ஆற்றல் குறைவாக இருக்கக் கூடிய நபரை மிக எளிதாக தன் பார்வையால் தாக்கி நிலை குழைய செய்கிறார். 

இவ்வாறு நிலை குழைந்த நபருக்கு மருத்துவ உதவியோ, உணவுப் பொருளால் வருகின்ற புரத சக்தியோ உதவாது. 

 இந்த கண் திருஷ்டியின் தாக்கத்தைக் குறைப்பதற்கு நம் உடலில் மிகப்பெரிய மின்காந்த ஆற்றல் ஒன்று உருவாக வேண்டும்.

 நமது முன்னோர்கள் இந்த மின்காந்த ஆற்றலை அதிகப்படுத்துவதற்காக தான் பல்வேறு ஆலயங்களை நிர்ணயம் செய்தனர் .

தற்போது உள்ள பழமை வாய்ந்த ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கிறது ஒவ்வொரு முறை  அதிக ஆற்றல் உள்ள ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது நம் உடலில் உள்ள குறைவான ஆற்றலானது ஒரு பூஸ்டர் போல அங்குள்ள இறை சக்தியை உறிஞ்சுகிறது.

 மேலும் அந்த சக்தியானது நாம் பழகும் நபர்கள்,போகும் இடம் சார்ந்து சில நாட்களுக்கோ சில மாதங்களுக்கோ பயன் தருகிறது.

 நாம் அணுகக்கூடிய நபரோ அல்லது நாம் அதிகம் பயன்படுத்தக்கூடிய இடங்களோ நமது ஆற்றலை எடுத்து கொள்ளவோ அல்லது அதிகரித்துக் கொள்ளவோ செய்கிறது.

 நமது உடலானது பஞ்ச பூத ஆற்றல்களை உள்ளடக்கியுள்ளது.

 பஞ்சபூதங்களில் ஒரு பூதம் குறையும்போதுதான் உடல்நலக் கோளாறுகள் உண்டாகிறது

 இந்த பஞ்சபூத ஆற்றல்களில் குறைபாடுகளின் காரணமாக தான் கண் திருஷ்டியின் வேகம் அதிகரிக்கிறது

 ஒரு மனிதனின் நாவில் இருந்து வரக்கூடிய வார்த்தையின் வீரியம் எவ்வளவு கொடுமையானது அதைவிட கொடுமையானது மனிதப் பார்வையில் இருந்து வரக்கூடிய அதிர்வலைகள்.

 ஒவ்வொரு மனிதரும் பிறப்பால் எண்ணற்ற திறமைகளைக் கொண்டே இப்புவியில் பிறக்கிறோம்.

 சரியான வழிகாட்டுதல் இல்லாததாலும் சரியான சமூக சூழல் இல்லாததாலும் அனைத்தும் வீணடிக்கப்படுகிறது.

 மேலும் தன்னை பற்றி அறிந்து கொள்ள போதிய அறிவும் எட்டாமல் போகிறது.

 வெற்றியாளர்கள் அனைவரும் இப்புவியில் இருந்தே பிறந்தவர்கள்தான் நேர்மறையான சூழல் நிலவும் இடங்களில் அவர்களின் பயணம் அதிகமாக இருக்கும் நேர்மறை ஆற்றலானது எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு அனைத்தும் ஜெயம

 

Tags :

Share via