இடித்து தூக்கிய கார் - இளம்பெண் பரிதாப பலி
தலைநகர் டெல்லியின் மயூர்விஹார் பகுதியில் நடந்த கார் விபத்து தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் மீது பாய்ந்தது. இந்த விபத்தில் 22 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஏழு பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதி மக்கள் கார் ஓட்டுநரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
Tags :



















