தசரா திருவிழாவில் ஜாதி அடையாளங்கள், உலோகத்தில் ஆன ஆயுதங்கள், ஆபாச நடனத்திற்கு தடை.

by Editor / 04-10-2023 08:45:42am
தசரா திருவிழாவில் ஜாதி அடையாளங்கள், உலோகத்தில் ஆன ஆயுதங்கள், ஆபாச நடனத்திற்கு தடை.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா உலக புகழ் பெற்றதாகும். இந்த ஆண்டு தசரா திருவிழா வருகின்ற 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மஹிசா சூரசம்காரம்
அக்டோபர் 24-ம் தேதி நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது. இதில் பல லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் தசரா திருவிழாவின் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோவில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர்  (பொறுப்பு)  கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்துதுறை அதிகாரிகள். தசரா குழுக்களின் நிர்வாகிகள் பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்பு திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:

தசரா திருவிழாவின் போது ஜாதி ரீதியான அடையாளங்கள், உலோகத்தாலான ஆயுதங்களையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி ஆபாச நடனங்கள் இரட்டை அர்த்தம் அர்த்தமுள்ள பாடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செயல்படுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்திய அவர்தென் மாவட்டத்திலிருந்து தசரா திருவிழாவிற்கு போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் கடந்த ஆண்டு விட கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தகவல் தெரிவித்த அவர், தசரா திருவிழாவின் போது பல்வேறு பகுதியிலிருந்து குலசேகரப்பட்டினத்திற்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த நேர அட்டவணை வெளியிடப்பட உள்ளது. மேலும் 32 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதில் பக்தர்களுக்கு தேவையான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.

 

Tags : தசரா திருவிழாவில் ஜாதி அடையாளங்கள், உலோகத்தில் ஆன ஆயுதங்கள், ஆபாச நடனத்திற்கு தடை.

Share via