சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு.

by Editor / 18-12-2021 12:41:36am
சின்ன சின்ன செய்திகளின் தொகுப்பு.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உண்மை நிலை அறியாமல் அரசியல் பேசி வருவது நகைப்பாக உள்ளது என்று மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவிட் 19 வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதால் பிரிட்டன் நிலைகுலைந்து போயியுள்ளது.


கரோனா காலத்தில் ஒன்பது சதவிகித சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமரிசித்துள்ள ராகுல் காந்தி, இதன் மூலம் அரசின் நண்பர்கள் பலன் அடைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீதான 12 வழக்குகள் வாபஸ்.
 

 

Tags :

Share via

More stories