ஆக.30 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு.... மேற்கு வங்க அரசு அறிவிப்பு...

by Admin / 13-08-2021 01:43:23pm
ஆக.30 வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு.... மேற்கு வங்க அரசு அறிவிப்பு...

ஆக.15-ல் முடிய இருந்த கட்டுப்பாடுகள் ஆக.30 வரை நீட்டிக்கப்படுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
 
மேற்கு வங்கத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக மே 16-ந்தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. வரும் 15-ந்தேதியுடன் முடிய இருந்த கட்டுப்பாடுகள் ஆகஸ்டு 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று அறிவித்தார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்து பேசிய அவர், மத்திய போலீஸ் படை பணிகளுக்காக யு.பி.எஸ்.சி., நடத்திய தேர்வில் மேற்கு வங்க தேர்தல் வன்முறை பற்றிய கேள்வி இடம் பெற்றுள்ளது என்றும், மேற்கு வங்க தேர்தல் வன்முறை பற்றி 200 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார்.

 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டுள்ளதற்கும் ஆவேசமடைந்து பேசிய மம்தா பானர்ஜி,  யு.பி.எஸ்.சி., தன்னாட்சி அதிகாரம் உடையது என்றும்,  ஆனால் தற்போது உள்ள மத்திய பாஜக அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார். தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை சீரழிப்பதே மத்தியில் ஆளும் பாஜக  அரசின் நோக்கமாக உள்ளது என்றும் அப்போது அவர் கடுமையாக சாடினார்.

 

Tags :

Share via