உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில்  நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி தரும் விழா.

by Editor / 15-01-2025 10:44:42am
உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில்  நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி தரும் விழா.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார்  திருக்கோயிலில் அண்ணாமலையார் நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சியளித்த நிகழ்வு இன்று நடைபெற்றது.

இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மாட்டு பொங்கலான இன்று அண்ணாமலையார் நந்தி பகவானுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வு வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும்.

அண்ணாமலையார் நந்தி பகவானுக்கு காட்சியளிக்கும் நிகழ்வையொட்டி இன்று அதிகாலையில் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று பின்னர் பலவிதமான காய்கறிகள், பழங்கள் மற்றும் முருக்கு, லட்டு, அதிரசம், பணம் உள்ளிட்டவைகளை கொண்டு மாலைகள் அணிவிக்கபட்டு சிறப்பு அலங்காராம் செய்யப்பட்டிருந்தது.

நந்தி பகவானுக்கு காட்சியளித்த பின்னர் உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார் திட்டி வாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சியளித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். ஒவ்வொரு ஆண்டும் மாட்டு பொங்கல் அன்று அண்ணாமலையார் நந்தி பகவானுக்கு காட்சியளித்து சூரியனுக்கு காட்சியளிப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

 

Tags : உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில்  நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி தரும் விழா.

Share via