1000 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா அமைச்சர் அன்பில் மகேஸ்

by Staff / 16-03-2023 04:55:45pm
1000 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா  அமைச்சர் அன்பில் மகேஸ்

தஞ்சாவூர் தீர்க்க சுமங்கலி மஹாலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஒரேநாளில் 2000 விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் வழங்கினார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஒரேநாளில் 1000 விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த 150 பயனாளிகளுக்கும், திருவையாறு வட்டத்தை சேர்ந்த 59 பயனாளிகளுக்கும்ஓரத்தநாடு வட்டத்தை சேர்ந்த 70 பயனாளிகளுக்கும், பூதலூர் வட்டத்தை சேர்ந்த 93 பயனாளிகளுக்கும். பட்டுக்கோட்டை வட்டத்தை சேர்ந்த 200 பயனாளிகளுக்கும், பேராவூணி வட்டத்தை சேர்ந்த 247 பயனாளிகளுக்கும், பாபநாசம் வட்டத்தை சேர்ந்த 95 பயனாளிகளுக்கும். கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த 63 பயனாளிகளுக்கும் மற்றும் திருவிடைமருதூர்வட்டத்தை சேர்ந்த78 பயனாளிகள் என மொத்தம் 1055 பயனாளிகளுக்கு ரூ. 4, 00, 12, 457 மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுதரா, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு). டி. கே. ஜி. நீலமேகம் (தஞ்சாவூர) மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார். ஆர்டிஓக் கள் ரஞ்சித் (தஞ்சாவூர்), பிரபாகர் (பட்டுக்கோட்டை) பூர்ணிமா (கும்பகோணம்) தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, அனைத்து வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via