பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் இன்று கூடுகிறது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்தநிலையில் அந்த காற்றின் சுழற்சி மதிமுகவையும் விட்டுவைக்கவில்லை.உட்கட்சி பிரச்சனையில் துரை வைகோ பதவியை துறந்த நிலையில் இன்று (ஏப்., 20) மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் கூடுகிறது. சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நிர்வாககள் கூட்டம் நடக்கிறது. மதிமுக அவைத்தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உரையாற்ற உள்ளார். முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ எம்.பி., விலகியுள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. உட்கட்சி பிரச்சனையில் துரை வைகோ பதவியை துறந்துள்ளார்.
Tags : பரபரப்பான சூழலில் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் இன்று கூடுகிறது.