வீட்டு வாசலில் முதியவர் கொலை சம்பவம் - 5 பேர் கைது
மதுரை மாநகர் யாகப்பா நகர் மெயின் ரோடு பகுதியில் முருகேசன் (64) என்ற முதியவரை நேற்று முன்தினம் ஒருகும்பல் வீட்டு வாசலில் வெட்டிப்படுகொலை செய்தது.இது தொடர்பாக அண்ணாநகர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில் மதுரை மேலமடை பாக்கியராஜ்(37), மணிகண்டன் (27), மதுரை ஆண்டார்கொட்டாரம் பகுதியை சேர்ந்த தமிழரசன், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சபரி காந்த்(33), விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் (27) ஆகிய 5பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த கொலை இடைத்தரகராக இருந்துவந்த முருகேசனுக்கும் பாக்கியராஜூவுக்கும் இடையே இடம் விற்பனை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக முருகேசனை வெட்டிக்கொன்றது விசாரணையில் தகவல்.
Tags : வீட்டு வாசலில் முதியவர் கொலை - 5 பேர் கைது


















