தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. அவதியில் மக்கள்

by Staff / 10-03-2024 04:10:23pm
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. அவதியில் மக்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிலவும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பீன்யா தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் மூடும் தருவாய்க்கு தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பீன்யா தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் சப்ளை 60 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பீன்யா தொழிற்பேட்டையில் உள்ள ஏறத்தாழ 16 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மற்றும் அதில் பணியாற்றி வரும் 12 லட்சம் ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவதாக தொழிற்துறை சங்கம் தெரிவித்து உள்ளது.
 

 

Tags :

Share via

More stories