ராணுவ ஹெலிகாப்டர் விபத்து... 21 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள முசாஃபராபாத் அருகே, பாகிஸ்தான் ராணுவத்தின் Mi-17 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்தத் துயரச் சம்பவத்தில் 21 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. PoK-ன் நீலம் பள்ளத்தாக்குப் பகுதிக்குக் கூடுதல் படைகள் கொண்டு செல்லப்பட்டபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
Tags :


















