தீபாவளி பண்டிகை:பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலி,148 இடங்களில் தீ விபத்து. 

by Editor / 13-11-2023 09:46:31am
 தீபாவளி பண்டிகை:பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலி,148 இடங்களில் தீ விபத்து. 

தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் 148 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. பட்டாசு வெடிக்க (காலை 6-7, மாலை 7-8) நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். பட்டாசுகளால் சென்னையின் பல்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் நல்ல வேலையாக இந்த தீ விபத்துகளில் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் பட்டாசு பட்டாசு வெடித்து சிதறியதில் சிறுமி நவிஷ்காவின் கை சிதைந்து உயிரிழப்பு.

 

Tags :  தீபாவளி பண்டிகை:பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலி,148 இடங்களில் தீ விபத்து. 

Share via

More stories