பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 2023 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம்..

by Editor / 15-12-2022 10:03:54pm
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 2023 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம்..

புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் வரும் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேக பணிகளுக்காக முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சி மலைக்கோவில் துவங்குகிறது.இதனைத்தொடர்ந்து ஜனவரி 18.01.2023 புதன்கிழமை காலை 9 மணிக்கு பூர்வாங்க பூஜைகள் தொடங்குகின்றன, 23.01.2023 அன்று மாலை முதற்கால வேள்வி துவங்குகிறது,. இதன் தொடர்ச்சியாக பாத விநாயகர் முதல் இரட்டை விநாயகர் வரை உள்ள பரிவார  சன்னதிகளுக்கு 26.01.2023 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை குடமுழுக்கு நடைபெறுகிறது. மேலும் தை மாதம் 13ஆம் தேதி 27.01.2023 வெள்ளிக்கிழமை சஷ்டி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 8:30 மணிக்கு மேல் 9:30 மணிக்குள் கும்ப லக்னத்தில் மூகூர்த்தக்கால் மலைக்கோயில் திருகுடமுழுக்கு நடைபெறுவதாக அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

 

Tags :

Share via