கர்நாடக தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

by Staff / 29-03-2023 12:08:34pm
கர்நாடக தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை மத்திய தேர்தல் ஆணையம் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடுகிறது. மாநிலத்தில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜேடிஎஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனிடையே பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via