பிப்.,18-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

by Staff / 12-02-2025 01:14:47pm
  பிப்.,18-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழ்நாடு அரசை கண்டித்து, வரும் 18ஆம் தேதி அதிமுக மாணவர் அணி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே 18ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை திமுக அரசு தடுக்க தவறியதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via