சிறுமி வன்கொடுமை விவகாரம்: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

by Editor / 26-07-2025 01:23:47pm
சிறுமி வன்கொடுமை விவகாரம்: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

திருவள்ளூர் சிறுமி கடந்த ஜூலை 12ல் மர்ம நபரால் வன்கொடுமை செய்யப்பட்டார். சுமார் 16 நாட்களுக்குப் பின்னர் குற்றவாளி நேற்று (ஜூலை 25) கைது செய்யப்பட்டார். இதனிடையே, சிறுமியின் உறவினர்கள் கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் குவிந்த காரணத்தால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளியை அடித்து நொறுக்க வேண்டும் என்ற ஆவேசத்துடன் மக்கள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via