அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது இன்று விசாரணை

by Editor / 30-01-2024 09:19:13am
அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது இன்று விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் கோரி 2வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உள்ளார். தன்னை கைது செய்யும் நோக்கில், ஆவணங்களில் திருத்தம் செய்து அமலாக்கத்துறையினர் பதில் மனு தாக்கல் செய்திருப்பதாக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நாளை வரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நீட்டித்திருந்தார்.

 

Tags : அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் மனு மீது இன்று விசாரணை

Share via

More stories

Logo