இலஞ்சி குமாரசாமி திருக்கோவில்.. அகஸ்தியரால் பாடல் பெற்ற ஸ்தலம்..
குற்றாலத்திற்கும் செங்கோட்டை இடையே அமைந்திருக்கும் அழகிய ஓர் ஊர்தான் இலஞ்சி. பச்சை பசேல் என பச்சை பட்டு உடுத்திய நிலமகள்.... நீல வண்ணத்தில் உயர்ந்து நிற்கும் மேற்கு தொடர்ச்சி மலை. நான்கு திசைகளை சுற்றி பார்த்தாலும் வானத்தை தொட்டுவிட துடித்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்கள். அருகிலே சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் நதி. செண்பகத் தோட்டத்தில் ஒலிக்கும் அக்கா குருவியின் ஓசை .எங்கேயும் எதிரொலித்துக் கொண்டிருக்கும்... இது முருகன் எழுந்தருளி இருக்கும் திரு இலஞ்சி குமாரசாமி திருக்கோவில்.. அகஸ்தியரால் பாடல் பெற்ற ஸ்தலம்.. மனதை மயக்கும் எழில் சூழ்ந்த இந்த கோவிலில் உள்ள நுழைகிற போதே மனம் ஒர் ஆனந்த மயக்கத்திற்கு செல்லும் நாடி நரம்புகள் எல்லாம் பக்தி வசப்படும். நாவோ,... முருகா ....முருகா ..என்று உச்சரிக்கத் தொடங்கும்.
இங்குள்ள சித்திர திருத்தத்தில் காசிவ முனிவர் துர்வாச முனிவர் கபில முனிவர் ஆகியோர் வேண்டுகோளுக்கிணங்க இலஞ்சிகுமாரராக வள்ளி- தேவசேனாவுடன் முருகப்பெருமான் எழுந்தருளி உள்ளார். பார்வதி தேவிக்கும் சிவபெருமானுக்கும் திருக்கையிலும் இமயமலையில் நடக்கின்ற பொழுது மக்கள் அனைவரும் திருக்கல்யாணத்தை பார்ப்பதற்காக வடக்கே செல்ல வடக்கு பக்கம் தாழ்ந்து தெற்கு பக்கம் உயர்ந்ததால் அதை சமன் செய்ய சிவபெருமான் ஆணைக்கிணங்க அவசியமோ தெற்கு நோக்கி வந்து வெள்ளை மணலில் சிவலிங்கத்தை நிறுவியதாக புராணங்கள் சொல்கின்றன இந்த கோயிலிலேயே அகஸ்திய முனிவருக்கு முருகர் உபதேசம் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது வைணவ தளமான குற்றாலத்தை சிவதரமாக அகஸ்தியர் மாற்றிய பெருமை உண்டு .
இக்கோவிலில் எழுந்து அருளி உள்ள முருக பெருமானை அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.. 14-ஆம் நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் இக்கோயிலை புதுப்பித்துள்ளதாகவும் 16ஆம் நூற்றாண்டில் சொக்கம்பட்டி ஜமீன்தார் காளத்திய பாண்டியன் கோவிலை சுற்றி சுவர் எழுப்பியதாகவும் வரலாறு சொல்கிறது.
இம் முருகனுக்கு வரதராஜ பெருமாள் என்று இன்னொரு பெயரும் உண்டு. வரத முருகா... மயில் வாகனனே என்று பாடியதால் இப்பெயர் பெற்றதாகவும் சொல்வர். வள்ளி- தேவசேனாவுடன் முருகன் இங்கு இருப்பதால்இங்கு திருமணம் செய்வது விசேஷமானது என்று சொல்லப்படுகிறது.. மகிழம்பூ மரங்கள் அதிகமாக இருப்பதின் காரணமாகவே திருவிலஞ்சிக்கு இன்னொரு பெயர் மகிழம். திருக்கோயிலில் முருகனை வழிபடக்கூடிய பக்தர்களுக்கு அறிவும் வரமும் தந்து அருள் பாலிக்கின்றார்
Tags :