ஆரோக்கியத்திற்கும் முதன்மையான இடம் பால் சார்ந்த பொருளுக்கு உண்டு.
மனித உடல் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கும் முதன்மையான இடம் பால் சார்ந்த பொருளுக்கு உண்டு. குழந்தைகளும் முதியவர்களும் பால் அருந்த வேண்டியது அவசியம். ஒரு குறிப்பிட்டவயதிற்குப் பிறகு உணவில் வெள்ளை அதிகம் உள்ளவற்றை தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். அதன்படி உப்பு, சர்க்கரை, பால் ,பாலாடை கட்டி, வெண்ணெய் இவற்றில் வழியாக உடல் எடை கூடுவதற்கோ.. இல்லை ,சர்க்கரை நோய் , ரத்தக்கொதிப்பு வருவதற்கோ இல்லை... டிரஸ் என்று சொல்லப்படுகிற மன அழுத்த நோய் வருவதற்கோ காரணங்களாக சொல்லப்பட்டாலும் மனித உடல் வளர்ச்சிக்கு பால் வழியான பொருள்கள் மிக அவசியம் ஆகும்.. பாலில் புரதம், கொழுப்பு ,சமநிலையுடைய கார்போஹைட்ரேட், அத்துடன் கால்சியம், ரிபோ பிளேவின், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ மற்றும் பி12 ,பொட்டாசியம் ,மெக்னீசியம், துத்தநாகம், அயோடின் போன்ற தாது பொருட்கள் இருப்பதனால் ,நாம் அவசியம் பால் சார்ந்த வெண்ணெய், நெய், பன்னீர் என்று அழைக்கப்படுகிற பாலாடை கட்டி போன்றவற்றை உட்கொள்வது அவசியமாகிறது.
Tags :