முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 3 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு. சிபிஐ விசாரணை நடைபெறுகிறது.முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.அதிமுக ஆட்சிக்காலத்தின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இவர் மீது, ரவீந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தாமதிப்பதாக கூறி, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியத்தை எதிர்த்து ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
Tags :