இளைஞர் மீது காரை மோதவைத்து விபத்தை உருவாக்கி  வெட்டிக் கொலை - 4 பேர் கைது

by Staff / 08-08-2025 03:20:53pm
இளைஞர் மீது காரை மோதவைத்து விபத்தை உருவாக்கி  வெட்டிக் கொலை - 4 பேர் கைது

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே  கடந்த 6ஆம் தேதி இருசக்கரவாகனத்தில் சென்ற நத்தநேரியை  சேர்ந்த தமிழரசன்-பிரபுதாஸ் ஆகியோர் சென்றபோது சொகுசு காரை மோத வைத்து பிரபு தாஸ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்தசம்பவத்தில் தொடர்புடைய  4 பேரை கைது செய்த காவல்துறையினர். முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதலால் கொலை நடந்ததா? என்ற கோணத்தில்  தீவிர விசாரணை. நடத்திவருகின்ற்றனர்.இந்த கொலை தொடர்பாக சிவ சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த வினோத், லிங்குசாமி, மகாராஜன், திசையன் விளையைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர் . பிரபுதாஸ் கோவையில் பணியாற்றியபோது வேறு ஒரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.இதில் அந்தப்பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும்தான் காரணமாக் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : இளைஞர் மீது காரை மோதவைத்து விபத்தை உருவாக்கி  வெட்டிக் கொலை - 4 பேர் கைது

Share via