அரசு பேரூந்து மீது ஆலமரம் முறிந்து விழுந்ததில் 6 பேர் பலி.

by Staff / 08-08-2025 03:02:12pm
அரசு பேரூந்து மீது ஆலமரம்  முறிந்து  விழுந்ததில் 6 பேர் பலி.

உத்திரபிரதேச மாநிலம் பாராபங்கியில் பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாராபங்கியில் இருந்து ஹைதர்கார் சென்ற அரசு பேருந்து (UPSTC) மீது ஆலமரம் ஓன்று இன்று முறிந்து விழுந்தது. இக்கோர விபத்தில், 5 பெண் ஆசிரியர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த மாநிலையத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : அரசு பேரூந்து மீது ஆலமரம் முறிந்து விழுந்ததில் 6 பேர் பலி.

Share via