தமிழ்நாடு அரசு பணி தேர்வாணைய தேர்வு -2 தொகுதி- 2 மற்றும் 2- ஏ பணிகள்- உத்தேச விடைகள் (tentative key)

by Admin / 24-09-2024 12:53:37am
தமிழ்நாடு அரசு பணி தேர்வாணைய தேர்வு -2 தொகுதி- 2 மற்றும் 2- ஏ பணிகள்- உத்தேச விடைகள் (tentative key)

தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 தொகுதி 2 மற்றும் 2 ஏ பணிகள் இல் அடங்கிய பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு கடந்த 14.09. 2024 நடத்தப்பட்டது .இதில் பொது தமிழ்- பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் (tentative key) தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த உத்தேச விடைகளின் மீது முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்கள் அதாவது 30 .0 9 .2024 மாலை 5.:45க்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஆன்சர் கீ சேலஞ்ச் என்ற சாளரத்தை பயன்படுத்தி மட்டுமே முறையீடு செய்யலாம். இதற்கான அறிவுரைகள் வழிமுறைகள் தேர்வாணைய இணையதளத்தில்www.tnpsc.gov.in வழங்கப்பட்டுள்ளன..

அஞ்சல் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் பெறப்படும் முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழ்நாடு அரசு பணி தேர்வாணைய தேர்வு -2 தொகுதி- 2 மற்றும் 2- ஏ பணிகள்- உத்தேச விடைகள் (tentative key)
 
Tags :

Share via