வள்ளலாருக்கு முப்பெரும் விழா - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

by Staff / 06-01-2024 12:54:48pm
வள்ளலாருக்கு முப்பெரும் விழா - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

வள்ளலாருக்கு முப்பெரும் விழா மற்றும் ரூ.90 கோடி மதிப்பீட்டில் சர்வதேச மையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்ட உள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு தமிழக பக்தர்களை அழைத்துச் செல்வது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் பொருத்தமானதுதான்' என்றார்.
 

 

Tags :

Share via