ரூ.6000 ரொக்கமாக வழங்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டோருக்கு சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த பகுதி ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும். புயல் வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கப்படும். புயல் வெள்ளத்தால் 33% சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும். வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Tags :



















