மழைக் காலம் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்புதீவிரம்.
மழைக் காலம் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. தினமும் 60 முதல் 70 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை 14,000-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு பரவல் அதிகரிக்கும் என்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் 20,000 பேர் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Tags : மழைக் காலம் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்புதீவிரம்.



















