எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைத்த அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 126 அடி உயரம் கொண்ட அதிமுக கொடி கம்பம் முறிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடி கம்பம் அடிப்பாகத்தில் முறிந்து மின்சார கம்பிகள் மீது விழுந்துள்ளது. மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த கொடி கம்பத்தில் கொடியேற்றி வைத்தார்.
Tags : எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைத்த அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்தது.














.jpg)




