மாணவரை அடித்த டீச்சர்.. வார்டன் பணி நீக்கம்

by Staff / 12-10-2024 12:46:02pm
மாணவரை அடித்த டீச்சர்.. வார்டன் பணி நீக்கம்

சங்கரன்கோவில் திருவேங்கடம் அருகில் உள்ள சுவாமிநாதபுரத்தில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதியில் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து விடுதி வார்டன் ராஜ் மோகன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அந்தப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை மாணவர்களை தாக்கியது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via