உக்ரைன்அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்கஅதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அன்று புளோரிடாவில் சந்திக்க உள்ளனர்.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 20 அம்ச அமைதித் திட்டத்தை இறுதி செய்ய உக்ரைன்அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்கஅதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் டிசம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று புளோரிடாவில் சந்திக்க உள்ளனர்.
தற்போதைய அமைதித் திட்டம் 90% தயார் நிலையில் உள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் போர்க்களத்தின் தற்போதைய நிலையை அப்படியே நிறுத்தி வைப்பது (freeze the front line) மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களைஉள்ளடக்கியது.
டொன்பாஸ் (Donbas) பகுதி, ஜாப்போரிஜியா அணுமின் நிலையம் மற்றும் உக்ரைனின் எதிர்கால பாதுகாப்பு குறித்த முக்கியமான விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
அமைதித் திட்டத்தின் சில அம்சங்கள் குறித்து உக்ரைன் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தவும் தான் தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டுக்கு முன்பாகவே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :


















