காமராஜர் பிறந்தநாள் தலைவர்கள் பதிவு.

'கல்லாமை எனும் இருள் அகற்றிட கண் துஞ்சாது உழைத்திட்ட பெருந்தலைவர்' காமராஜர் என எடப்பாடி பழனிச்சாமி போற்றியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள X பதிவில், "சத்துணவு தந்து மாணவர்களின் பசிப்பிணியை போக்கிய சரித்திர நாயகர். நிர்வாக திறன், எளிமைக்கு இலக்கணமாகவும், பொதுநல வாழ்வின் உதாரண அவதாரமாக திகழ்ந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினத்தில் பெருந்தலைவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்" என தெரிவித்துள்ளார்.
தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து மறைந்த மாபெரும் தலைவர் காமராஜரின் பிறந்தநாள் இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது X பக்கத்தில், "தமிழ்நாட்டுக் குழந்தைகள் கல்விக்காக கிராமங்கள் தோறும் பள்ளிகளைத் தொடங்கினார். ஊழலற்ற வளர்ச்சிப் பாதையை நோக்கிய மாநிலமாக தமிழ்நாடு சென்றுகொண்டிருந்தது. இவரது திறமையான ஆட்சியும் நிர்வாகமும், இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கென ஒரு தனி இடம் கிடைக்க காரணமாக அமைந்தது" என தெரிவித்துள்ளார்.
மறைந்த Ex CM காமராஜர் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மதிய உணவு தந்து கல்விக் கண் திறந்த காமராஜரின் நினைவுகளை போற்றி வணங்குவதாக தமிழிசை சௌந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், ஊழலையும் கருப்பு பணத்தையும் ஒழிப்பதற்காக தான் எடுத்த இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை காமராஜர் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார் என மோடி பேசியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
Tags : காமராஜர் பிறந்தநாள் தலைவர்கள் பதிவு.