எல்லா ஆதாரமும் இருக்கு - அண்ணாமலை அதிரடி

by Staff / 17-04-2023 01:40:45pm
எல்லா ஆதாரமும் இருக்கு - அண்ணாமலை அதிரடி

திமுகவினரின் ஊழல் பட்டியல் எனக் கூறி பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டார். தொடர்ந்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டிய அண்ணாமலை, ரூ.500 கோடி இழப்பீடு தர வேண்டும் எனக் கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த திமுக ஆட்சியில், சென்னை மெட்ரோ ரயில் பணியில் நடந்த ஊழல் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் உள்ளதாகவும், பாஜகவின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்ததற்கு, 500 கோடியே 1 ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via