காவல்துறையின் சார்பில் கொரானாவுக்காக நூதனமான முறையில் வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் போர்டு

by Editor / 06-01-2022 10:47:44pm
காவல்துறையின் சார்பில் கொரானாவுக்காக நூதனமான முறையில்  வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் போர்டு

தமிழகத்தில் மீண்டும் கொரோனோ தாக்கமும் ஓமிக்ரான் பரவலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோனோ தாக்கமும் ஓமிக்ரான் வைரஸ் காய்ச்சலின்  பரவலும் இணைந்துள்ளதால் மீண்டும் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி. சனி. ஞாயிறு ஆகிய  மூன்று நாட்கள் ஆலயங்கள் உள்ளிட்ட பகுதி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இப்படி மக்களை பாதுகாக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருகின்ற நிலையில் கொரோனோ தொற்றிலிருந்து  இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இதன் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் களத்தில் இறங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில்  தேனி மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் நூதனமான முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஆங்காங்கே டிஜிட்டல் ப்ளக்ஸ் போர்டுவைக்கப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதில் ஒரு மாஸ்க்  விலை 2 ரூபாய் என்றும் அது அணிய வில்லை எனில் போலீசுக்கு 200ரூபாய் அபராதம்  கட்ட வேண்டுமென்றும், அப்படி மீறி தவறினால் மருத்துவமனைகளில்  இரண்டு லட்ச ரூபாய் வரை செலவு செய்யும் சூழல் ஏற்படும் என்றும் நூதனமான முறையில் பொதுமக்கள் கண்களில் படும் விதம் விழிப்புணர்வு பிரசுரங்கள் ஆங்காங்கே கட்டி வைக்கப்பட்டுள்ளதாக இந்த போர்டுகள் சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றது.ர் இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Tags :

Share via