முதலாளி மிரட்டியதால் இளைஞர் தற்கொலை

by Editor / 03-03-2023 03:58:10pm
முதலாளி மிரட்டியதால் இளைஞர் தற்கொலை

 புதுக்கோட்டை மாவட்டம், இழுப்பூர் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான மகேந்திரன், இவர், கோவை செல்வபுரம் அடுத்த எல்ஐசி காலனி பகுதியில், தங்கியிருந்து, பிரபு என்பவரின், தள்ளு வண்டி டிபன் ஸ்டாலில் சப்ளையராக பணியாற்றி வருகிறார். மகேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது, இதனை கண்டித்த அவரது ஒனர் பிரபு, அவரது குடிப்பழக்கம் குறித்து மகேந்திரனின் தாயிடம் தெரிவிப்பதாக மகேந்திரனிடம் கூறினார் இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மகேந்திரன் நேற்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், உணவக கடைக்கு வராததால் மகேந்திரன் அறைக்கு சென்று பார்த்த பிரபு, மகேந்திரன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து இது குறித்து செல்வபுரம் காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories