வட கிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் பாஜக

by Staff / 03-03-2023 03:52:59pm
வட கிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் பாஜக

திரிபுரா தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. நாகாலாந்தில் பாஜக-என்டிபிபி கூட்டணி வெற்றி பெற்றது. மேகாலயாவில் 26 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த என்பிபி-க்கு ஆதரவளிக்கவும் பாஜக முடிவு செய்துள்ளது. கட்சியின் செயல்பாடுகளை அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியும் பாராட்டினர். இந்த மூன்று வடகிழக்கு மாநிலங்களும் ஒரு காலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களின் ஆதிக்கத்தில் இருந்தது. தற்போது இந்த 3 மாநில தேர்தல் வெற்றி பாஜகவுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அடுத்ததாக கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது.
 

 

Tags :

Share via