வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலால் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இந்த காய்ச்சலால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வேகமாக பரவும் இந்த காய்ச்சலால் நான்கு நாட்களுக்கு அதீத காய்ச்சல் தொண்டை வலி, இருமல், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் பாடாய்படுத்துடுகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதே இந்தக் காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். காய்ச்சல், சளிக்கு மருத்துவர்களிடம் உரிய பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
Tags :



















