நடுரோட்டில் துப்பாக்கியுடன் ரகளை செய்த பெண்

by Staff / 17-08-2023 11:46:47am
நடுரோட்டில் துப்பாக்கியுடன் ரகளை செய்த பெண்

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நாசாவ் கவுண்டியில் பெண் ஒருவர் துப்பாக்கியுடன் ரகளை செய்தார். கடந்த செவ்வாய்க்கிழமை மதியம், பெல் மோரில் உள்ள ஜெருசலேம் அவென்யூ சந்திப்பில் பெண் ஒருவர் தனது கையில் துப்பாக்கியுடன் வாகனங்களை மறித்து ரகளை செய்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ​​இளம் பெண்ணை மடக்கி பிடித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via