ஆளுநர் மாளிகை பெயர் இனி மக்கள் பவனாக மாற்றம்- மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
இந்தியா முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகள் , துணைநிலை ஆளுநர் மாளிகைகள் பெயர்களை மாற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காலனித்துவ கால பெயர்களை அகற்றி அவற்றை மக்களோடு நெருக்கமாக இருக்கும் பொருட்டு இந்த பெயர் மாற்றத்தை அறிவித்து உள்ளது மத்திய உள்துறை. நவம்பர் 25 அன்று உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகள் இனி லோக் பவன் [மக்கள் பவனாக ] என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் அதேபோல் துணைநிலை ஆளுநர்களின் இல்லங்கள் ராஜி நிவாஸ் என்பது லோக் நிவாஸ் என மாற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கம் அசாம் ஆளுநர் மாளிகையின் பெயர் அதிகாரப்பூர்வமாக லோக் பவன் என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :



















